சீனாவில் ஏசு படத்துக்குப் பதில் ஜின்பிங் படத்தை வைக்க வலியுறுத்தப்பட்டதாக புகார்

சீனாவில் அரசின் நலத்திட்டங்களை பெற கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஏசுவின் படத்துக்குப் பதிலாக அதிபர் ஜின்பிங் படத்தை வைக்க அதிகாரிகள் வலியுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. தென்கிழக்கு சீனாவின் யுகான் மாகாணத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் வீடுகளில் அதிபர் ஜின்பிங் படத்தை வைக்க அதிகாரிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஏசு அவர்களை வறுமையில் இருந்து வெளிக் கொண்டுவரவோ, நோய்களில் இருந்து காப்பாற்றவோ மாட்டார் என்றும் ஆனால் அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சியால் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன