சீனாவின் வர்த்தக முறைகேடுகளுக்கு எதிரான உத்தரவில் அமெ., அதிபர் டிரம்ப் கையெழுத்து

சீனாவின் வர்த்தக முறைகேடுகளுக்கு எதிரான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட உள்ளார்.

சீனாவுடன் வர்த்தகம் செய்யலாமா வேண்டாமா என்பது உள்ளிட்ட விவகாரங்களை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியே தீர்மானிக்க வகை செய்யும் இந்த உத்தரவில் டிரம்ப் திங்கட்கிழமை கையெழுத்திட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் சீனாவின் அத்துமீறல்கள், பேடண்ட் திருட்டுகள், அறிவுசார் சொத்துப் பரிமாற்றங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்த அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியான ராபர்ட் லைட்திஸ்ஸெருக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிடுவார் என கூறப்படுகிறது. புதிய உத்தரவு தொடர்பான குறிப்பாணை பற்றி, சீன அதிபர் ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துவிட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன