சீனாவின் எதிர்ப்பாள், போட்ஸ்வானா பயணத்தை ரத்து செய்த தலாய்லாமா

சீனாவின் கடும் எச்சரிக்கையை அடுத்து, ஆப்ரிக்க நாடான போட்ஸ்வானாவுக்கு மேற்கொள்ள இருந்த பயணத்தை புத்த மதத் தலைவர் தலாய்லாமா ரத்து செய்துள்ளார்.

போட்ஸ்வானா (Botswana) தலைநகர் (Gaborone) கேபோரோனில் வருகிற 17ஆம் தேதி முதல், 3 நாட்கள் நடைபெற இருந்த கருத்தரங்கில் தலாய்லாமா பங்கேற்று உரையாற்ற இருந்தார். இந்நிலையில், போட்ஸ்வானாவுக்கு தலாய்லாமா செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சீன அரசு, தங்களது இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்று கூறியிருந்தது. இதனால், தலாய்லாமா தமது போட்ஸ்வானா பயணத்தை ரத்து செய்துள்ளார்.

நிகழ்ச்சிக்கு வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்து போட்ஸ்வானா அதிபருக்கும், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்களுக்கும் தலாய்லாமா கடிதம் எழுதியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன