சிவாஜியின் சிலையை பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் நிறுவ நடிகர் சங்கம் வேண்டுகோள்

நடிகர் சிவாஜி கணேசன் சிலையை பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் அமைக்க நடிகர் சங்க செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கடந்த 2ஆம் தேதி நள்ளிரவு கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி சிலை அகற்றப்பட்டு சிவாஜி மணிமண்டப வளாகத்தில் வைக்கப்பட்டது. சிவாஜி சிலையை மெரினாவிலேயே மீண்டும் நிறுவ வேண்டும் என ஃபெப்சி மற்றும் இயக்குனர் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன.

இந்த விவகாரம் தொடர்பாக, நடிகர் சங்க செயற்குழு ஆலோசனை நடத்தியது. அப்போது, சிவாஜி சிலையை, பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொதுமக்கள் அதிகமாக கூடும் பொது இடத்திலோ நிறுவ வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை தமிழக அரசிடம் வேண்டுகோள் கடிதமாக கொடுக்கவும் நடிகர் சங்க செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன