சிவகங்கை – மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

மானாமதுரையை அடுத்த பதினெட்டாங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் வனிதா.

இன்று காலை வாசல் தெளிப்பதற்காக வீட்டருகே உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது தோட்டத்தில் இருந்து கம்பிவேலியை தொட்ட வனிதா மீது மின்சாரம் பாய்ந்தது. அலறல் சத்தத்தோடு உயிருக்குப் போராடிய வனிதாவை காப்பற்ற முயன்ற வனிதாவின் மாமியார் பாப்பத்தி மீதும், உறவினர் சத்தியநாதன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

தகவலறிந்து சென்ற போலீசார் மூவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், பாப்பாத்தியின் வீட்டிற்கு வரும் மின்கம்பி தாழ்வாக தொங்கியதால், சத்தியநாதன் மின்வயரை, இரும்புகம்பியை வைத்து உயர்த்தி கட்டியுள்ளார். மின்வயரில் இருந்து இரும்பு கம்பி வாயிலாக மின்கசிவு ஏற்பட்டதால் அருகில் இருந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை அறியாமல் தொட்ட வனிதாவும், அவரை காப்பாற்ற முயன்ற இருவரும் உயிரிழந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன