சிவகங்கை – கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் கடத்தல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருவரை கடத்திச் சென்ற மர்மக்கும்பல் ஒருவரை வெட்டி வீசிய நிலையில், இன்று புதுக்கோட்டையில் இன்னொருவரை இறக்கி விட்டுச் சென்றுள்ளது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த உஞ்சனை புதூர் மற்றும் தேவக்கோட்டையை சேர்ந்த இளைஞர்கள் சிங்கப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்த போது பெண் விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதில் உஞ்சனை புதூரை சேர்ந்த ராம்கணேஷ் 2014ஆம் ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்டார். இதற்கு பழியாக தேவக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ் குமார் சிங்கப்பூரில் கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில், ராம்கணேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய சுப்பிரமணி, சூரிய நாராயணன் ஆகிய இருவரை நேற்று தேவகோட்டையில் மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்றனர். இதில் சுப்பிரமணியை கைகளை வெட்டி விட்டு, காரைக்குடி அருகே மித்ராவயலில் தள்ளி விட்டு சென்ற கடத்தல் கும்பல், இன்று சூர்ய நாராயணனை புதுக்கோட்டையில் விட்டு சென்றது. தகவலறிந்த தேவகோட்டை நகர காவல் துறையினர் சூர்ய நாரயணனை அழைத்து வந்து கடத்தல்காரர்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!