சிறையில் அடைக்கப்பட்டுள்ள குர்மீத் ராம் ரஹீமிடம் மேலும் இரு கொலை வழக்குகள் குறித்து விசாரணை

பாலியல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ரோட்டக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீமிடம் மேலும் இரு கொலை வழக்குகள் குறித்து விசாரணை நடைபெற்றது.

ராம் ரஹீமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி, காணொலி காட்சி மூலம் அவரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் அனுமதி கோரினர். இதற்கு அனுமதி வழங்கிய சிபிஐ நீதிமன்ற நீதிபதி, சிறையில் இருந்த ராம் ரஹீமிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தினார். பத்திரிகையாளர் ராம் சந்தர் சத்ரபதி, தேரா அமைப்பின் மேலாளராக இருந்த ரஞ்சித் சிங் ஆகிய இருவரது கொலை வழக்குகளுக்காக ராம் ரஹீமிடம் விசாரணை நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *