Advertisement

சிறுத்தை நகம், யானை தந்தம் வைத்திருந்த ஒருவர் கைது

தேனி மாவட்டம் வருஷநாடு அருகே சிறுத்தை நகம், பல், யானை தந்தம் ஆகியவற்றை வைத்திருந்த ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

வருசநாட்டை அடுத்த கோம்பைத்தொழு பகுதியில் வனத்துறையினர் சோதனையில் நடத்தினர். அதில் சசி என்பவரின் வீட்டில் சிறுத்தையின் மண்டைஓடு, நகம், பல், யானைத்தந்தம் மற்றும் புலியின் எலும்புகள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், சசியை கைது செய்து வனவிலங்குகள் எப்போது வேட்டையாடப்பட்டன என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன