சிறியவகை பார்சல்கள், கடிதங்களை எடுத்துச் செல்லும் டிரோன்கள்

சிறியவகை பார்சல்கள், கடிதங்களை எடுத்துச் செல்லும் டிரோன்கள் ஸ்விட்சர்லாந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த டிரோன்கள் மூலம் போக்குவரத்தில் சிக்காமல், மருந்துகள் முதலுதவிப் பொருட்கள், கடிதங்கள், சிறிய வகை உணவுப் பொருட்கள் உள்ளிட்ட 500 கிராம் எடைக்கு உட்பட்ட பொருட்களை அனுப்ப முடியும். தடைகளை தாண்டிச் செல்லும் வகையிலும் ஆழமான, உயரமான மற்றும் செங்குத்தான பகுதிகளிலும், கரடுமுரடான அணுக முடியாத பகுதிகளிலும் பொருட்களை சேர்க்கும் வகையிலும் இந்த டிரோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்லும் வகையில் கூண்டு உள்ளிட்ட அமைப்புகள் உள்ளதாகவும் தவிர்க்க முடியாத காரணங்களால் டிரோன் விழுந்துவிட நேரிட்டாலும் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன