Advertisement

சிமெண்ட் கால்வாயில் சோதனை ஓட்டம் நடைபெற்ற உடனே இடிந்து விழுந்த கால்வாய் சுவர்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே புதிய சிமெண்ட் கால்வாயில் சோதனை ஓட்டம் நடைபெற்ற உடனே சுவர் இடிந்து விழுந்ததால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பாலக்கோடு அருகே செங்கன் பசுவன் தலாவ் ஏரியில் இருந்து உபரிநீரை வெளியேற்ற கடந்த 2016-ம் ஆண்டு 10கோடி ரூபாய் செலவில் 8கி.மீ நீளமுள்ள சிமெண்ட் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டது. இதில், சோதனை நடவடிக்கையாக வினாடிக்கு 30 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்ட சில நிமிடத்திலேயே, சுமார் 100 அடி நீளத்திற்கு சிமெண்ட் கால்வாயின் தடுப்புச் சுவர் சரிந்து விழுந்தது. மேலும், கால்வாயின் பல இடங்களில் நீர் கசிந்து வெளியேறியது. இதையடுத்து தண்ணீர் நிறுத்தப்பட்டது.

சுமார் 50 ஆண்டு காலமாக தண்ணீருக்காக போராடி பெற்ற கால்வாயை, தரம் இல்லாத பொருட்களைக் கொண்டு கட்டி மோசடி செய்திருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர். கால்வாயை சீர்செய்ய என தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன