சின்ஸோ அபே மீண்டும் ஜப்பான் பிரதமராக பதவியேற்பார் என்று கருத்துக் கணிப்பு

ஜப்பான் பிரதமராக உள்ள சின்ஸோ அபே, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஊழல் புகார்கள், எதிர்க்கட்சிகள் பலவீனம், வடகொரியாவுடனான பதற்ற சூழல் ஆகிய மூன்று காரணங்களுக்காக சின்ஸோ அபே தேர்தலை அறிவித்துள்ளார். இதற்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக் கிழமை நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் மொத்தமுள்ள 475 இடங்களில் சின்ஸோ அபே மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்று வெற்றி பெறுவார் என்று ஊடகங்கள் கணித்துள்ளன.

இதில் பெரும்பாலானோர் சின்ஸோ அபேவை விட சிறந்த பிரதமராக யாரும் செயல்பட முடியாது என்று கூறியுள்ளனர். இன்னும் சிலர், வடகொரியாவுடனான பிரச்சனையை சமாளிக்க அபே தான் சிறந்த தலைவர் என்று கருத்து தெரிவித்துள்ளனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன