சினிமா கட்டணம் குறைக்கப்படாததால் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே பனிப்போர்

கேளிக்கைவரி குறைப்புக்காக நடத்தப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்தாலும், சினிமா கட்டணம் குறைக்கப்படாததால் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே பனிப்போர் உருவெடுத்துள்ளது.

திரையரங்குகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத கேளிக்கைவரியை முழுமையாக ரத்து செய்ய கோரி, கடந்த 10 நாட்களாக புதிய படங்களை வெளியிடாமல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்திவந்தனர். 25 சதவீதம் திரையரங்கு கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி அளித்திருந்த நிலையில், 8 சதவீதம் மட்டும் கேளிக்கைவரி வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு சலுகை அளித்து அறிவித்தது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விஷால், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது புகார் அளியுங்கள் என்று பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை பற்றவைத்தார்.அதற்கு திரையரங்கு உரிமையாளர்களும் தங்கள் சார்பில் தக்க பதில் அளித்துச்சென்றனர்

நியாயமான கட்டணம் வசூலிக்கப்படும் என்று உறுதி அளித்த அபிராமி ராம நாதனிடம், திரையரங்கில் இரண்டு சமோசா 80 ரூபாய்க்கு விற்க்கப்படுவதை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியதால் ஆவேசமானார்

தமிழகத்தில் கணினி மூலம் டிக்கெட் வழங்கும், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் தவிர்த்து பெரும்பாலான தனி திரையரங்குகளில் முதல் 3 நாட்கள் ஏல முறையில் மெர்சல் படத்தை திரையிடும் ஒப்பந்தத்தை தனி நபர்களுக்கு பல லட்சங்களுக்கு விற்றுவிட்டன. இந்நிலையில் திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படும் என்பது வெறும் வாய்ச்சொல்லாகவே இருக்கும் என்கின்றனர் சினிமா ரசிகர்கள்..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன