சிதிலமடைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் – விபரீதம் நிகழும் முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆண்டிபட்டி அருகே இடிந்து விழும் நிலையில், அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் உள்ளது. விபரீத நிகழ்வுகள் அரங்கேறும் முன்னே, பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கொட்டோடைபட்டி கிராமத்தில், 60 மாணவ, மாணவிகள் பயிலும் அரசு தொடக்கப்பள்ளியில் தான் இந்த அவலம் காணப்படுகிறது… இந்த அரசு பள்ளியின் மேற்கூரை, வெளிப்புறச்சுவர்கள் ஆங்காங்கே பெயர்ந்துவிழுந்து, சிதிலமடைந்த நிலையில் உள்ளது… மேலும், கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் விழுந்துள்ளது… அவ்வப்போது பெய்யும் மழைக்கு, பள்ளி வகுப்பறைகளுக்குள் மழைநீர் ஒழுகுகிறது… இதனால், மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்….

இதுதொடர்பாக கொட்டோடைபட்டி அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தனபாக்கியத்திடம் கேட்டபோது, பள்ளிக்கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருப்பது பற்றி உயர் அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்திருப்பதாகவும், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியிருப்பதாகவும் தெரிவித்தார். இப்பிரச்சனையில் அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன