சாலையில் சென்று கொண்டு இருந்த காரில் திடீரென தீ

கோவை அருகே சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில் காரை ஓட்டி வந்தவர், காரிலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த தீலிப்குமார் தனது குடும்பத்தினருடன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். நள்ளிரவு 1 மணியளவில், கோவை L&T பைபாஸ் டோல்கேட் அருகே வந்தபோது காரில் திடீரென தீப்பற்றியது. காரில் இருந்த திலீப்பின் மனைவி மற்றும் குழந்தைகள் உடனடியாக காரில் இருந்து இறங்கியதால் உயிர் தப்பினர். ஆனால் இதில் காரை ஓட்டிவந்த தீலிப்குமார், காரில் தீ பிடித்த காரணத்தினால் உடனடியாக என்ன செய்வது என்று தெரியாமல் திணறியதால் சீட்பெல்டை அகற்ற முடியவில்லை.

இதனால் காரில் இருந்து இறங்க முடியாமல் உட்கார்ந்த நிலையிலேயே திலீப் உடல் கருகி உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற போலீசார், திலீப்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!