சாலைமறியலில் ஈடுபட்ட என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி

என்எல்சி சுரங்கம் 1ஏ-வில் பணிபுரிந்து வந்த 1400 ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நாட்கள் 26 நாட்களில் இருந்து 19 நாட்களாக குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கடந்த 20 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக புதுவை தொழிலாளர் நல ஆணையத்தில் நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.

இந்நிலையில் வடலூரில் பாட்டாளி தொழிற்சங்கம், என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்கள் ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன