Advertisement

சாதாரண இடமாக மாறிய அதிநவீன சிறப்பு மருத்துவமனை பிரிவு

சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையின் அதிநவீன சிறப்பு மருத்துவமனை பிரிவில், குளிர்சாதன இயந்திரங்கள் கடந்த 3 மாதங்களாக இயங்காமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் சாதாரண மருத்துவமனைபோல் செயல்பட்டு வருகிறது.

சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில், பிரதான் மந்திரி ஸ்வஸ்த்யா சுரக்’ஷா யோஜனா திட்டத்தின் கீழ், அதிநவீன சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டது. அங்கு கடந்த 3 மாதங்களாக குளிர்சாதன இயந்திரங்கள் பழுதடைந்து காணப்படுவதால், நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, நோயாளியின் உறவினர்கள் பேப்பர் போன்ற பெருட்களை கொண்டு விசிறி வருகின்றனர். உள் நோயாளிகளுக்கு போதுமான படுக்கைகள் இல்லாததால், குழந்தைகள்கூட தரையில் படுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதால், இரவில் கொசுக்கள் படையெடுக்கின்றன. கழிவறைகள் பூட்டப்பட்டு கிடப்பதால் நோயாளிகளும், பார்வையாளர்களும் பாதிக்கப்படுள்ளனர். இது குறித்து மருத்துவமனை முதல்வர் கனகராஜை சந்தித்து கேட்டபோது, குளிர்சாதன இயந்திரங்களை சரிசெய்ய 8 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுளதாகவும், விரைவில் சரிசெய்யபடும் எனவும் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன