சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை அறிமுகப்படுத்த ஐசிசி முடிவு

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை அறிமுகப்படுத்த ஐசிசி முடிவெடுத்துள்ளது. டிடுவெண்டி, ஐபில் போட்டிகளால் பொலிவிழந்த டெஸ்ட் கிரிக்கெட்டை மீண்டும் பிரபலப்படுத்தும் நோக்கில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2 ஆண்டுகள் நடைபெறும் என்று ஐசிசி கூறியுள்ளது. 9 அணிகள் பங்கேற்று, 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. 3 தொடர்கள் சொந்த மண்ணிலும், 3 தொடர்கள் வெளிநாடுகளிலும் நடத்தும் வகையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019 ஆம் ஆண்டு தொடங்க உள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது. இதேபோல், 13 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் லீக் என்ற புதிய தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன