சமூக வலைத்தளத்தில் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு பரப்பிய நபர் கைது

அமைச்சர் ஜெயக்குமார் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை தனிப்பட்ட முறையில் தாக்கி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்று இடப்பட்டது. இது குறித்து அமைச்சரின் ஆதரவாளர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, பதிவிட்ட நபரின் ஃபேஸ்புக் கணக்கை ஆய்வு செய்த போலீசார் சீர்காழியை சேர்ந்த 28 வயதான சதீஷ்குமார் என்பவரை கைது செய்தனர். அவரை சென்னைக்கு கொண்டு வந்த போலீசார் அவர் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புதல், ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சனம் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சதீஷ்குமாரை ஆஜர் படுத்திய போலீசார் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதன் பேரில் அவரை சிறையில் அடைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன