Advertisement

சபரிமலை சீசன் தொடங்கியது : மதுரையில் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

மதுரையில் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சபரிமலை சீசன் தொடங்கியதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருவர். இதையடுத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன்படி எல்லீஸ்நகர் சாலையில் 300 வாகனங்களை நிறுத்தும் வகையில் கட்டண வாகன காப்பகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வாகன காப்பக வளாகத்தில் ஒரே நேரத்தில் 500 பேருக்கு பயன்படும்படி மெகா சமையல் கூடம் அமைக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 இலவச கழிப்பறைகள், 11 குளியலறைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வாகன காப்பகம் எதிரே தங்கும் விடுதி அமைக்கப்பட்டுள்ளதாகவும் வாகன காப்பகத்தில் இருந்து மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் அழகர்கோவில், திருப்பரங்குன்றம், திருவாதவூர் போன்ற இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன