சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழையலாமா? – உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதிப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

பல்வேறு குழுவினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஏராளமான மனுக்களை ஒன்றாக விசாரித்து வந்த தலைமை நீதிபதி அமர்வு, கோவிலின் சனாதான மரபையும் தர்மங்களையும் மதிப்பதா அல்லது பெண்களுக்கு சம உரிமை அளிப்பதா என்பதை தீர்மானிக்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், இவ்வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இடதுசாரி தலைமையிலான அரசு 2007ம் ஆண்டு பெண்கள் கோவிலுக்கு நுழைய அனுமதிக்கலாம் என தனது பதில் மனுவில் கூறியிருந்தது. ஆனால் அதன் பின்னர் அமைந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு பெண்கள் சபரிமலைக்குள் நுழைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. மீண்டும் இடதுசாரி அரசு அமைந்ததும் 2016ம் ஆண்டு பெண்கள் சபரிமலைக்கு நுழைய மாநில அரசு ஆதரவு தெரிவித்தது.

தற்போது 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்று தடை நீடிக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன