சனி கோள் ஆய்வில் ஈடுபட்ட கேசினி விண்கலத்தின் பணி நிறைவு

சனி கோளை 13 ஆண்டுகளாகச் சுற்றி வந்து அரிய தகவல்களை பூமிக்கு அளித்து வந்த கேசினி ((Cassini)) விண்கலத்தின் பணி நிறைவடைந்ததால் அதன் செயல்பாடு வெள்ளிக்கிழமை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

சூரிய குடும்பத்தின் கோள்களின் வரிசையில், பூமியிலிருந்து, செவ்வாய், வியாழன் கோள்களுக்கு அடுத்தபடியாக சனி கோள் அமைந்துள்ளது. இந்த சனிக் கோளின் ஆய்விற்காக, 1997ஆம் ஆண்டு கேசினி ((Cassini)) விண்கலத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பியது.

7 ஆண்டுகள் பயணித்து 2004ஆம் ஆண்டு சனிக்கோளை அடைந்த கேசினி ((Cassini)) விண்கலம், அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, சனிக்கோள் குறித்து பல்வேறு அரிய தகவல்களை புவியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வந்தது.

7 ஆண்டுகள் பயணம், 13 ஆண்டுகள் ஆய்வு என 20 ஆண்டுகளாக சனிக்கோள் ஆய்வுக்காக அர்பணிக்கப்பட்ட கேசினி((Cassini)) விண்கலம், சனி கோளின் வளிமண்டலத்தில் வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி மாலை 5.25 மணிக்கு தாழ்வாகப் பறந்து இறுதியில் தீப்பந்தாக மாறி பணியை நிறைவு செய்த தாக நாசா அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன