சத்தியமங்கலம் – வனப்பகுதியில் பாலம் கட்டித்தர கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வனப்பகுதியில் பாலம் கட்டித்தரக்கோரி 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

கடம்பூர் வனப்பகுதியில் மாக்கம்பாளையம், கோம்பைதொட்டி, அரிகியம், கோவிலூர், குரும்பூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் பெய்த கனமழையால் கடந்த 20 நாட்களாக இந்த பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதை கண்டித்து 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவியர் கடம்பூர் – சத்தியமங்கலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்டவர்களிடம் கடம்பூர் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *