சத்தியமங்கலம் அருகே சேற்றிய சிக்கிய பெண் யானை மீட்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சேற்றில் சிக்கிய பெண்யானையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சித்தன்குட்டை பகுதிக்கு வனப்பகுதியிலிருந்து யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் அருந்துவதற்காக வருவது வழக்கம். நேற்றிரவு பவானி ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த பெண்யானை ஒன்று, சேற்றில் சிக்கிய நடக்க முடியாமல் விழுந்துவிட்டது. காலையில் அப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள் யானை சேற்றில் சிக்கியதைக் கண்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வந்த வனத்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் 3 மணி நேரம் போராடி யானையை மீட்டனர். பின்னர் யானை மெதுவாக எழுந்து பவானி ஆற்றைக்கடந்து வனப்பகுதிக்குள் சென்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன