சண்டிகரில் இருந்து 2 மணி நேரத்தில் டெல்லி செல்ல புதிய அதிவேக ரயில் சேவை

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இருந்து தலைநகர் டெல்லிக்கு 2 மணி நேரத்தில் செல்லும் வகையில் புதிய அதிவேக ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

245 கிலோமீட்டர் தூரம் கொண்ட சண்டிகர்-டெல்லி மார்க்கம் நாட்டில் உள்ள மிகவும் நெரிசலான ரயில் பயணப் பாதைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தற்போது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் (Shatabdi) சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுவதால் மூன்றரை மணி நேரத்தில் சண்டிகரில் இருந்து டெல்லி செல்ல முடிகிறது. இந்த பயண நேரத்தை 2 மணி நேரமாகக் குறைக்கும் வகையில் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் அதிவேக ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஏற்கனவே உள்ள வழித்தடத்தில் சில மாற்றங்கள் செய்து, ரயில் பாதை, சிக்னல் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு பிரான்சு நாட்டு ரயில்வேயுடன் இணைந்து பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன