சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்டதாக 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

சேலம் நகரில் முறைகேடாக மதுவிற்பனை செய்த இரண்டு பெண்கள் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து சேலத்திலுள்ள பெரும்பாலான மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி நகரில் சட்டவிரோத மதுவிற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து திடீர் சோதனையில் ஈடுபட்ட போலீசார் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக, காசகாரனூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார், கமலா மற்றும் புதுரோடு பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகியோரை கைது , அவர்களிடம் இருந்து 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன