சட்டக் கல்லூரிகளில் பொதுப்பிரிவில் கூடுதல் இடங்களை உருவாக்க கோரிய மனு தள்ளுபடி

அரசு சட்டக் கல்லூரிகளில் பொதுப்பிரிவில் கூடுதல் இடங்களை உருவாக்க கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஐஸ்வர்யா என்ற மாணவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில் தமிழக அரசு 69 சதவீதம் வழங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பான வழக்கில் பொதுப்பிரிவினருக்கு கூடுதல் இடங்களை உருவாக்க மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது என்று தெரிவித்துள்ளார். அதேபோல நடப்பாண்டில் தமிழ்நாடு சட்டப் பல்கலைகழகத்தில் பொதுப்பிரிவினருக்கு கூடுதல் இடங்களை உருவாக்க உத்தரவிடவேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திர பாபு உச்சநீதிமன்ற உத்தரவு என்பது 2014 ஆம் ஆண்டுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், எனவே நடப்பாண்டு பொதுப்பிரிவினருக்கு கூடுதல் இடங்களை உருவாக்க உத்தரவிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன