Advertisement

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தொட்டி வைத்திருந்த திரையரங்குக்கு அபராதம்

சேலத்தில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தொட்டிகள் வைத்திருந்த திரையரங்குக்கு மாநகராட்சி ஆணையர் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

கோரிமேடு பகுதியில் மெர்சல் படம் திரையிடப்பட்டுள்ள பச்சியம்மன் திரையரங்கில், மாநகராட்சி ஆணையர் சதீஷ் மற்றும் ஊழியர்கள், டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த 3 தண்ணீர் தொட்டிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் லார்வாக்கள் இருந்ததை கண்ட அவர்கள், திரையரங்குக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

பச்சியம்மன் திரையரங்கு மேலாளர் வேணுகோபாலை, டெங்கு கொசு உற்பத்திக்கு எதிராக உறுதிமொழி எடுக்க வைத்த மாநகராட்சி ஆணையர் சதீஷ், டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் தொடர்ந்து செயல்பட்டால், திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன