கோவையில் 2 புதிய பென்ட்லி சொகுசு கார்கள் அறிமுகம்

பென்ட்லி மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2 சொகுசுக் கார்கள் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. புதிய ((Bentayga)) பென்டைகா என்ற SUV ரகக் கார் உலகின் வேகமான சொகுசு கார் என கூறப்படுகிறது. வழக்கத்தைவிட செயல்திறன் நிறைந்த காராக பென்டைகா இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த காரின் உட்புறம் உயர்தர மரத்தாலும் ஸ்காட்லாந்தின் கம்பளியாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதே போல் ((Flying Spur)) ஃப்ளையிங் ஸ்பர் என்ற செடான் வகைக் காரும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய பென்ட்லி கார்களின் தோராய விலை மூன்று முதல் நான்கு கோடி ரூபாய் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!