கோவில் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி கொள்ளை

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கோவில் பூட்டை உடைத்து 4 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

எ.தொட்டியாங்குளத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் நேற்றிரவு கொள்ளை நிகழ்ந்துள்ளது. சாமி கழுத்தில் கிடந்த தங்கத் தாலி, கிரீடம் உள்ளிட்ட 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி, முக்குளம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதுதொடர்பாக முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன