கோவில் நிலத்தில் கட்டிய கட்டிடத்திற்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை.

சென்னை அம்பத்தூர் அருகே இந்து அறநிலையத்துக்கு சொந்தமான நிலத்தில் கட்டிடம் கட்டி விதிகளை மீறி உள் வாடகைக்கு விட்டதால், நிலம் மீட்கப்பட்டு அங்கு கட்டப்பட்டிருந்த கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
பாடி பகுதியில் உள்ள ஸ்ரீ கைலாச நாதர் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. கோவில் நிலங்கள் அடிமனை முறையில் வாடகைக்கு விடப்படுகிறது. இந்த நிலையில், 2 ஆயிரத்து 880 சதுர அடி மனையை சிவரோஜா என்பவருக்கு கோவில் நிர்வாகம் மாத அடிமனை வாடகைக்கு கொடுத்துள்ளது. ஆனால் சிவரோஜா, 15 லட்சம் ரூபாய்க்கு மேல், கோவில் நிர்வாகத்திற்கு பாக்கி வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அங்கு கட்டிடம் கட்டி 25 லட்ச ரூபாய்க்கு உள் வாடகை விட்டு உள்ளார். இதையடுத்து சட்டவிதிகளை மீறியதாகக் கூறி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 5 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன