Advertisement

கோரக்பூரில் அரசு மருத்துவமனையில், மூளை அழற்சி நோயால் 68 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல்

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில், குழந்தைகள் உயிரிழக்கும் துயரச் சம்பவங்கள் தொடர் கதையாக மாறியிருக்கிறது. மூளை அழற்சி நோயால், கடந்த 4 நாட்களில் மட்டும் 68 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின், குழந்தைகளுக்கான பிரத்யேக அவசர சிகிச்சை பிரிவில், 80க்கும் அதிகமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில், நாளொன்றுக்கு சராசரியாக 17 குழந்தைகள் என நான்கு நாட்களில் 68 குழந்தைகள் உயிரிழந்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் இதே மருத்துவமனையில், 63 குழந்தைகள் உயிரிழந்தன.

இந்த நிலையில், மீண்டும் அதே மருத்துவமனையில் துயர நிகழ்வு அரங்கேறியிருக்கிறது. கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இந்தாண்டு, ஜனவரி முதல் செப்டம்பர் வரையில், ஆயிரத்து 718 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன