கோயில் திருவிழாவில் பிளக்ஸ் பேனர் வைப்பது தொடர்பாக மோதலில் 5 பேரின் மண்டை உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோயில் திருவிழாவில் பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேரின் மண்டை உடைக்கப்பட்டது.

அறந்தாங்கியை அடுத்த சீனமங்கலம் காமாட்சியம்மன் கோவிலில், ஆடி மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு ஒரு சமூகத்தினர் வைத்திருந்த பிளக்ஸ் பேனரை மற்றொரு சமூகத்தினர் கிழித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பினரும் உருட்டைக்கட்டை, இரும்புக் கம்பி ஆகியவற்றால் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதில் 5 பேரின் மண்டை உடைக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மோதல் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன