கொலை வழக்கில் ஆஜராக சென்ற நபர் சுட்டுக் கொலை

ஹரியானாவில் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதற்காகச் சென்ற இளைஞர் ஒருவர், சிலரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ரோஹ்டக் மாவட்டம் ரித்தல் கிராமத்தைச் சேர்ந்த அங்கித் என்ற இளைஞர், கொலை வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதற்காக தமது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்தவர், அங்கித்தை நெத்தியில் துப்பாக்கியால் சுட்டார்.

இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோரம் விழுந்ததும், அங்கித்துடன் வந்த நபர் தப்பி ஓடினார். துப்பாக்கியுடன் வந்த கொலையாளி, ஈவு இரக்கமின்றி அங்கித்தை நெத்தியிலும், மார்பிலும் சுட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அங்கித் பலியானார்.

இந்தக் காட்சிகள் அங்குள்ள கடையில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இதை வைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். தேசிய கபடி வீரர், இதே இடத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அங்கித் முக்கிய குற்றவாளியாக உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!