கை, கால்களை கட்டி அடித்து உதைக்கப்பட்ட பெண்

வீட்டை கொளுத்தியதாக கூறி, கை, கால்களை கட்டிப்போட்டு தலித் பெண் அடித்து உதைக்கப்பட்ட வழக்கில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய சென்னை மண்டல இயக்குனர் விசாரணை நடத்தினார்.

திருச்சி மாவட்டம் தத்தமங்கலம் ஊராட்சியில் தலித் மக்களுக்கு அரசு இலவசமாக கொடுத்த இடங்களை, வேறு சாதியை சேர்ந்த சிலர் விற்க முயன்றுள்ளனர்.

இதற்கு ஈஸ்வரி என்பவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 24-ம் தேதி இரவு, ஈஸ்வரியின் குடிசையும், அருகிலிருந்த வீடும் எரிந்து சாம்பலாயின.

இதையத்து, ஈஸ்வரியே தனது வீட்டுக்கு தீ வைத்ததாக கூறி, அவரது கை, கால்களை கட்டி சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

பின்னர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஈஸ்வரி, திடீரென மாயமாகியுள்ளார்.

அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், நேரில் ஆய்வு மேற்கொண்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய சென்னை மண்டல இயக்குநர் மதியழகன், காவல் மற்றும் வருவாய்த்துறையினருக்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன