கேரளாவில் கார் மீது பேருந்து மோதும் நேரடி காட்சி

கேரள மாநிலம் கோட்டயம் புறவழிச்சாலையில் கார் மீது அரசு பேருந்து மோதும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

சாலையில் சென்று கொண்டிருந்த கார், வலதுபுறம் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு செல்வதற்காக திரும்பிய போது, பெட்ரோல் நிலையத்தில் இருந்து ஒரு கார் வெளியேறியது. இதனால் சாலையில் இருந்து பெட்ரோல் நிலையத்திற்குள் செல்ல முயன்ற கார் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த பேருந்து கார் மீது மோதியது. நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் காரானாது பெட்ரோல் நிலையத்திற்கு செல்வதற்காக திடீரென வலது புறம் திரும்பியதே இந்த விபத்திற்கு முக்கிய காரணம்.

காரை இடது புறம் செலுத்தி, சாலையில் வாகனம் எதுவும் வரவில்லை என்பதை உறுதிப்படுத்திவிட்டு பின்னர் வலதுபுறம் வந்து பெட்ரோல் நிலையத்திற்குள் வாகனங்கள் செல்லும் வழியில் கார் நுழைந்திருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது. ஆனால் வாகனங்கள் வெளியேறும் வழியில் கார் திடீரென நுழைய முயன்றதே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாகிவிட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!