கொரிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் இறுதிக்கு முன்னேறி பி.வி. சிந்து அசத்தல்

அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்தியாவின் பி.வி. சிந்து, கொரியா ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். சியோலில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் பெண்களுக்கான அரையிறுதிப் போட்டியில் சீனாவை சேர்ந்த பிங் ஜியாவை ((He Bingjiao)) சிந்து எதிர்கொண்டார். முதல் செட்டில் பி.வி.சிந்து 21 -10 என எளிதாக வென்றார். சுதாரித்து விளையாடிய சீன வீராங்கனை 2வது செட்டை 21 -17 என தன்வசப்படுத்தினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டை 21-16 என கைப்பற்றி இறுதி போட்டிக்கு முன்னேறினார் சிந்து. இறுதிப்போட்டியில் ஜப்பானின் Nozomi Okuhara-வை சிந்து எதிர்கொள்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!