கூவம் ஆற்றுக்கரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளைஞர் சடலம்

சென்னையில் கூவம் ஆற்றுக் கரையில் இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொல்லப்பட்டுள்ளார். சென்னை சேத்துப்பட்டு ஜோதியம்மாள் நகரைச் சேர்ந்தவர் பட்டு என்கிற பார்த்திபன். இன்று காலை இவர் அதே பகுதியில் கூவம் ஆற்றின் கரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.

இது குறித்து சேத்துப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட பார்த்திபன் கடந்த 2015ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் நடந்த ஒரு கொலை தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டு கடந்த திங்கள்கிழமைதான் ஜாமீனில் வெளியில் வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பார்த்திபனுடன் சிலர் மது அருந்தியதாகவும்,அவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன