கூர்க்காலாந்து மாநிலம் அமைக்க உயிர் தியாகம் செய்ய தயார்

தனி மாநில கோரிக்கைக்காக கூர்க்காலாந்து இளைஞர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பு கூறியுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பின் தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவின் இளைஞர் அமைப்பின் தலைவர் பிரகாஷ் கரங் கூறியுள்ளார். மேலும் தங்கள் அமைப்பில் இருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தனிமாநிலம் கேட்டு உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாகவும், அதற்காக அவர்கள் தன்னைத் தொடர்பு கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி மேற்கு வங்கத்தின் கூர்காலாந்து பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக முழு அடைப்புப் போராட்டம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன