கூர்க்காலாந்து கோரி போராடியவர்கள் மீது போலீசாரின் அத்துமீறல்களுக்கு கண்டனம்

மேற்குவங்கத்தில் இருந்து கூர்க்காலாந்தை தனியாகப் பிரிக்க போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள சுக்னா எனுமிடத்தில் பெருந்திரளாக பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரைக் கண்டித்து முழக்கம் எழுப்பியபடி அவர்கள் பேரணியாக சென்றனர். போலீசார் புகைக் குண்டுகள் வீசியதால் கிராமத்தில் வசிக்க முடியாத படி நச்சுப்புகை சூழ்ந்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனிடையே மும்பையில் கூர்க்காலாந்து ஆதரவாளர்கள் பலர் கடற்கரையை சுத்தம் செய்தபடியே தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன