கூட்டுறவு வங்கிகளில் அரசியல்வாதிகள் டெபாசிட் செய்யவில்லை-செல்லூர் ராஜு

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, தமிழக கூட்டுறவு வங்கிகளில், அரசியல்வாதிகள் யாரும் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக கூட்டுறவு வங்கிகளில், கணக்கு வழக்குகள் அனைத்து முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். கூட்டுறவு வங்கி முதலீடுகளில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், தமிழக கூட்டுறவு வங்கிகளில் இருந்து 467 கோடியே 92 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன