குழந்தைகளுக்கு ஊசி போட்ட சிறிது நேரத்தில் வலிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம்

கேரள எல்லைப் பகுதிகளில் காய்ச்சல் சற்று அதிகம் பரவி வருவதாக தமிழக சுகாதார துறை தெரிவித்திருந்தது.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த ஞாயிறு மட்டும் ஒரே நாளில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில், 15 குழந்தைகளுக்கு செவியர்கள் ஊசி போட்டதாக கூறப்படுகிறது. ஊசி போட்ட அரை மணி நேரத்தில் உடலில் நடுக்கம் ஏற்பட்டு வலிப்பு வந்ததுள்ளது.

அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மருத்துவரிடம் தெரிவித்தையடுத்து, வலிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஊசி போடப்பட்ட 9 மாத குழந்தைக்கு உடல் நடுக்கம் நீங்காததால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு செலுத்தும் முன்பாக, ஊசி மருந்து முறையாக பரிசோதிக்கப்பட்டதா என்பது குறித்து சுகாதாரதுறை ஆய்வு செய்யவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!