குளத்தின் கரை உடைந்து ஊருக்குள் புகுந்த தண்ணீர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கனமழையால் குளக்கரை உடைந்து கிராமத்திற்குள் மழைநீர் புகுந்ததால் கிராம மக்கள் அவதியடைந்தனர்.

சத்தியமங்கலம் அருகே ஒங்கல்வாடி கிராமத்தில் உள்ள குளம் நிரம்பியதால் கரை உடைந்து மழைநீர் கிராமத்திற்குள் புகுந்தது. தாழ்வான பகுதியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால், மக்கள் இரவு முழுவதும் உறங்க முடியாமல் தவித்தனர். ஈரம் காரணமாக 3 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. வீடுகளில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்சேதம் ஏற்படவில்லை. மழைநீர் வடியாததால் கிராமமக்கள் அருகாமையில் உள்ள வீடுகளில் தங்கி உள்ளனர்.

வெள்ள பாதிப்பு குறித்து பார்வையிட அதிகாரிகள் வரவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள பொதுமக்கள், உடைந்த குளத்தின் கரையை சீரமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!