குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் அருவிகளில் குளிக்க தடை

குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருவதால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி மாத பிறப்பு என்பதால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குற்றால அருவிகளில் குளித்துவிட்டு செல்ல வந்தனர். ஆனால், வெள்ளப்பெருக்கால், குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், ஐயப்ப பக்தர்களும், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *