Advertisement

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா வாகனங்களில் போக்குவரத்து நெரிசல்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் தமிழக- கேரள எல்லைப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழக-கேரள எல்லைப்பகுதியான செங்கோட்டை -பிரானூர் பார்டர் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கேரள மற்றும் தமிழக லாரிகள், பேருந்து,கார் என ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன.

இந்நிலையில் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் வாகனங்களும் பிரானூர் பார்டரில் உள்ள உணவகங்களில் குவிந்ததால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் அந்த பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி போக்குவரத்தை சீர் செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன