குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுவையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு மத்திய வங்க கடல் முதல் குமரி கடல் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சில இடங்களில் கனமழையாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகட்சமாக திருச்சியில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஆலங்குடி, திருப்புவனத்தில் தலா 7 சென்டிமீட்டரும், கரூர், பர்கூர், ஏற்காட்டில் தலா 6 சென்டிமீட்டரும் ஓமலூர், குடியாத்தம், ராசிபுரம், ராயக்கோட்டையில் தலா 5 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன