கும்பகோணம் – பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் கொண்டாடி மகிழ்ந்தனர்

கிருஷ்ண ஜெயந்தி விழாவை கும்பகோணத்தில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் கிருஷ்ணர் வேடமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். வருகிற 14ந் தேதி கோகுலாஷ்டமியை முன்னிட்டு கும்பகோணம் கொரநாட்டுக்கருப்பூரில் உள்ள மெட்ரிக் மற்றும் பன்னாட்டு பள்ளியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர் வேடமிட்டு அவரின் சிறு பருவ குறும்புகளை வெளிப்படுத்தினர். தொடர்ந்து கிருஷ்ணர் பாடலுக்கு பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன