குவிந்து கிடக்கும் குரோமிய கழிவுகள் – வாழ்வதற்கு தகுதியற்ற வாணியம்பாடி

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் செயல்படும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் மற்றும் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் 2 லட்சத்து 27 ஆயிரம் டன் குரோமியக் கழிவுகளால் வாழவே தகுதியற்ற நகரமாகியுள்ளது வாணியம்பாடி
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் 104 தோல் தொழிற்சாலைகள், வீ.சி மோட்டூர் பகுதியில் 89 தோல் தொழிற்சாலைகள், விஷாரம் பகுதியில் 22 தோல் தொழிற்சாலைகள் உட்பட, ராணிப்பேட்டை வட்டாரத்தில் 220-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இவை, கடந்த 20 ஆண்டுகளாக தோல் கழிவுகளை வெளியேற்றி பாலாற்றை பாழ்படுத்தி வந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உதவியுடன், 4 பொது தோல் கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்த சுத்திகரிப்பு நிலையங்களை மாசுகட்டுப்பாடு வாரியம் முறையாக பராமரிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்ட நிலையில், 2015-ம் ஆண்டு ஒரு நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், கட்டண செலவை மிச்சப்படுத்துவதற்காக, ஏராளமான ஆலைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை இரவு நேரங்களில் பாலாற்றில் வெளியேற்றி வருகின்றன. இவற்றுடன், உணவு பதப்படுத்தும் வேதிப்பொருட்கள் தயாரிக்கும் ஆலை, மருந்துகளுக்கான மூலப்பொருள் தயாரிக்கும் ஆலை, துணி துவைக்கும் சோப்பு மற்றும் பவுடர்கள் தயாரிக்கும் ஆலைகளும் பாலாற்றில் கழிவுகளை கலந்து வருவதாக புகார் கூறப்படுகிறது.

இராணிப்பேட்டை சிப்காட்டில் 104 தோல் தொழிற்சாலைகள், வீ.சி மோட்டூரில் 89, விஷாரத்தில் 22 தோல் தொழிற்சாலைகள் உள்ளன இராணிப்பேட்டை வட்டாரம் முழுவதும் 220-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன கடந்த 20 ஆண்டுகளாக அந்த ஆலைகள் தோல் கழிவுகளை வெளியேற்றி பாலாற்றை பாழ்படுத்தி வந்தன4 ஆண்டுகளுக்கு முன்பு, மாசு கட்டுப்பாடு வாரிய உதவியுடன், 4 பொது தோல்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன பொது சுத்திகரிப்பு நிலையங்களை மாசுகட்டுப்பாடு வாரியம் முறையாக பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

2015-ம் ஆண்டு ஒரு சுத்திகரிப்பு நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் கட்டண செலவை மிச்சப்படுத்த சுத்திகரிக்கப்படாத கழிவுகள் இரவு நேரங்களில் பாலாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது இவற்றுடன், உணவு பதப்படுத்தும் வேதிப்பொருட்கள் தயாரிக்கும் ஆலை, மருந்துகளுக்கான மூலப் பொருள் ஆலை.துணி துவைக்கும் சோப்பு மற்றும் பவுடர்கள் தயாரிக்கும் ஆலைகளும் பாலாற்றில் கழிவுகளை கலப்பதாக புகார்.

தோல் தொற்சாலை கழிவுகள் ஒருபுறம் என்றால், அவற்றின் தேவைகளுக்காக 1975-ம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு குரோமேட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனம், வாணியம்பாடிக்கு நிரந்தர வடுவாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் லாபம் ஈட்டி, பின்னர் நட்டம் காரணமாக 1995-ம் ஆண்டு நிரந்தரமாக மூடப்பட்ட இந்த ஆலையில் இருந்து, 2 லட்சத்து 27 ஆயிரம் டன் குரோமியக் கழிவுகள், மூன்றரை மீட்டர் உயரத்துக்கு படிந்து அகற்றப்படாமல் உள்ளது. இதிலுள்ள ஆபத்து மிகுந்த ரசாயணங்களால், பொதுமக்களுக்கு புற்றுநோய், மலட்டுத் தன்மை உள்ளிட்ட ஏராளமான வியாதிகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

தோல் தொழிற்சாலை கழிவுகள் ஒருபுறம் என்றால், தமிழக அரசின் குரோமியம் தொழிற்சாலை மறுபுறம் தோல் தொழிற்சாலை தேவைக்கென 1975-ம் ஆண்டு தமிழக அரசால் குரோமியம் தொழிற்சாலை தொடங்கப்பட்டது ஆரம்பத்தில் லாபம் ஈட்டி, பின்னர் நட்டம் காரணமாக 1995-ம் ஆண்டு குரோமியம் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது ஆனால், 2.27 லட்சம் டன் குரோமிய கழிவுகள் மட்டும், மூன்றரை மீட்டர் உயரத்துக்கு படிந்து அகற்றப்படாமல் உள்ளது குரோமிய கழிவுகளின் ஆபத்து மிகுந்த ரசாயணங்களால், புற்றுநோய் முதல் ஏராளமான வியாதிகள் ஏற்படுகின்றன

தற்போது இந்த குரோமிய கழிவுகளை அப்புறப்படுத்த 100 கோடி ரூபாய் அளவுக்கு செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை என்பதால், சர்வதேச அளவில் டெண்டர் விடப்பட்டே நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக, 2014-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று மத்திய அரசின் சுற்றுசூழல் அமைப்புடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வு குழுவினர், 3 ஆண்டுக்குள் கழிவுகள் அகற்றப்படும் என தெரிவித்தனர்.

ஆனால், அதற்கான ஆரம்பகட்ட வேலைகளே தொடங்கப்படாத நிலையில், நிலத்தடி நீரைக்கூட பயன்படுத்த முடியாத நிலையில், நியூயார்க் நிறுவன அறிக்கையின்படி, உலகின் மிகவும் மாசடைந்த நகரங்களில் ஒன்றாக திகழ்கிறது வாணியம்பாடி. இது குறித்து மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, மவுனத்தையே பதிலாக அளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன