Advertisement

குமரி மாவட்டம் ஆலஞ்சோலையில் தொடர் திருட்டு

கன்னியாகுமரி மாவட்டம் ஆலஞ்சோலையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சோபா ஃபிளாரன்ஸ் என்பவரது வீட்டில் கைவரிசை காட்டிய அந்த பெண்ணை, சிசிடிவி கேமரா பதிவைக் கொண்டு போலீஸார் பிடித்துள்ளனர்.

பிடிபட்ட பாசில்லா, ஃபிளாரன்ஸ் வீட்டில் திருடிவிட்டு, கேமராவில் சிக்காமல் இருக்க வீட்டிற்கு தீ வைத்ததுடன், மிளகாய்ப் பொடி தூவியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோபா ஃபிளாரன்ஸ் வீட்டில் அவர் அடிக்கடி பணம், நகை மற்றும் பொருட்களை திருடியுள்ளார். இதை விசாரணையில் பாசில்லா ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த தகவல் தெரிந்ததும் ஆலஞ்சோலையில் வசிக்கும் பலரும் தங்களது வீட்டில் பொருட்கள் திருடு போனது பற்றி கடையாலுமூடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன