குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கொத்து கொத்தாக காய்க்கும் ருத்திராட்ச காய்கள்

இமயமலையில் காணப்படும் அரிய வகை ருத்ராட்ச காய்கள் குன்னூர் சிம்ஸ்பூங்காவில் பச்சை பசேல் என கொத்து கொத்தாய் மரங்களில் காய்த்து தொங்குவதை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிடுகின்றனர். இமயமலை மற்றும் நேபாளத்தில் காணப்படும் அரிய வகை ஐந்து முகம் கொண்ட ருத்திராட்ச மரங்கள் இரண்டு உள்ளன.

அதில் பச்சை பசேல் என ருத்திராட்ச காய்கள் கொத்து கொத்தாய் காய்த்து தொங்குகின்றன. இவற்றை காணவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் சிவன் பக்தர்கள் சிம்ஸ் பூங்காவிற்கு வருகை தருகின்றனர்.மேலும் மரத்தின் அடியில் காய்ந்து விழுந்த ருத்ராட்சை கொட்டைகளை அவர்கள் சேகரித்துச் செல்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன