குட்கா விவகாரத்தில் திமுக MLAக்களுக்கு நோட்டீஸ்-ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தடை செய்யப்பட்ட குட்காவை சட்டப்பேரவைக்குள் கொண்டு சென்றதாக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேருக்கு எதிராக அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அவை உரிமை குழுவின் நோட்டீசை எதிர்த்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மனுதாரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமை குழுவின் தலைவர் சார்பில் ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பதில் மனு தயாராக உள்ளதாகவும், இன்றைக்குள் எதிர் மனுதாரர்களுக்கு வழங்கிவிடுவதாகவும் தெரிவித்தார். எனவே வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதனை அடுத்து வழக்கு விசாரணை வரும் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பதாகவும் அதற்குள் பதில் மனுவை எதிர்மனுதாரர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். அதுவரை ஏற்கனவே உள்ள இடைக்கால உத்தரவு தொடரும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன